ADDED : ஆக 07, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழா தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் பழநி ரோட்டில் உள்ள முத்தழகுப்பட்டி செபஸ்தியார் திருவிழா ஆக. 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4 ம் தேதி மின் தேர்பவனி நடந்தது.
நேற்று முன்தினம் குழந்தைகளை ஏலம் விடும் வினோத நிகழ்ச்சியுடன் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு,கோழி காய்கறிகளை கொண்டு விடிய விடிய அசைவ விருந்து நடந்தது. தொடர்ந்து நேற்று மதியம் தேர் பவனி நடந்தது. இதை தொடர்ந்து சர்ச்சில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர்.