ADDED : செப் 30, 2026 04:42 AM
செம்பட்டி: சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.-
நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூமாலைகள் சாற்றப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.
வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயில், அய்யாபட்டி மாணிக்க விநாயகர் கோயில், கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வடமதுரை : வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு மடத்துக்கடை செல்வவிநாயகர், மேற்குரத வீதி சித்தி முக்தி விநாயகர், மங்கம்மாள் கேணி விநாயகர், தென்னம்பட்டி ஊர்மந்தை விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.
