ADDED : செப் 29, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
செம்பட்டி, செப்.30-
செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில் உட்பட விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது.-
