/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் அண்டாவிற்குள் விழுந்த குழந்தை பலி
/
தண்ணீர் அண்டாவிற்குள் விழுந்த குழந்தை பலி
ADDED : ஜூலை 11, 2025 10:13 PM

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அய்யனார்நகரில் தண்ணீர் அண்டாவிற்குள் விழுந்த 2 வயது ஆண் குழந்தை இறந்தது.
அய்யனார்நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியப்பன், 28, என்பவரின் மனைவி காயத்ரி, 25. இருவரும் பாத்திர வியாபாரம் செய்கின்றனர். இவர்களது மகள் சாரா ஸ்ரீ, 8, மகன் துரைப்பாண்டி, 2.
முனியப்பன் நேற்று வெளியே சென்றிருந்தார். மகள், சாரா ஸ்ரீ பள்ளிக்கு சென்று விட்டார். காயத்ரி, துரைப்பாண்டி மட்டும் வீட்டில் இருந்தனர்.
வீட்டின் வெளியே விளையாடிய குழந்தை, அங்கிருந்த தண்ணீர் நிறைந்திருந்த அண்டாவிற்குள் விழுந்து இறந்தது.
கடந்த ஜூனில் நவாமரத்துப்பட்டியில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, 6 வயது சிறுமி பலியானார்.
அந்த சோகம் நீங்குவதற்குள் வேடசந்துாரில் நேற்று அண்டாவிற்குள் விழுந்து குழந்தை இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.