UPDATED : நவ 24, 2026 09:44 PM
ADDED : நவ 24, 2026 09:42 PM
வேடசந்துார்:
தாடிக்கொம்பு அருகே குழந்தையை நரபலி கொடுத்து குழி தோண்டி புதைத்துள்ளதாக கிடைத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தாடிக்கொம்பு பேரூராட்சி அய்யம்பாளையம் அருகே சீத்தசாலைப்புதுார் காட்டுப் பகுதியில் பிளாஸ்டிக் பெட்டி, அதன் அருகில் குழி தோண்டி மூடிய நிலையில் மண் மேட்டின் மீது மலர் துாவியும் இருந்தது. ஆடு மேய்க்க சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தந்தனர். அங்கு மக்கள் திரண்ட நிலையில் குழந்தையை நரபலி கொடுத்து புதைத்திருக்கலாம் என பல விதமாக தகவல் பரவியது.
தகவலறிந்த வேடசந்துார் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தோண்டி பார்த்தனர். அதில் இறந்த வளர்ப்பு நாய்க்குட்டியை பெட்டியில் கொண்டுவந்து புதைத்ததும், அதன் மீது மலர் துாவி சென்றதும் தெரியவந்தது. அதன் பிறகே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
