/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குட்டையில் மூழ்கி சிறுவர்கள் மரணம்
/
குட்டையில் மூழ்கி சிறுவர்கள் மரணம்
ADDED : அக் 11, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:விவசாய பண்ணைக்குட்டையில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கொம்பேறிபட்டி மம்மானியூர் சேர்ந்த கருப்பையா மகன் சபரீஷ்வரன், 7. பாகாநத்தம் மலைப்பட்டி பெருமாள் மகன் ஹரிகிருஷ்ணன், 3. இருவரும் கிழக்கு மலைப்பட்டியில் உள்ள உறவினர் தோட்டத்திற்கு சென்றனர்.
அங்கு விவசாய பணிக்காக ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரை சேகரித்து, நில மட்டத்தில் தார்ப்பாய்களை விரித்து அமைக்கப்பட்டிருந்த பண்ணை குட்டையில் நேற்று மதியம் விளையாடினர்.
ஏழு அடி உயர குட்டையில் முழு அளவில் நீர் தேங்கி இருந்ததால் இருவரும் மூழ்கி இறந்தனர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.