/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாஸ்கு திருவிழாவில் துாம்பா ஊர்வலம்; மெழுகுவர்த்தி ஏந்தி வந்த கிறிஸ்தவர்கள்

ADDED : ஏப் 27, 2025 05:41 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள வியாகுல அன்னை சர்ச்சில் 334ம் ஆண்டு பாஸ்கு விழாவை யொட்டி துாம்பா ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி வியாகுல அன்னை சர்ச்சில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகையின் போது பாஸ்கு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு பாஸ்கு திருவிழா ஏப். 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இயேசுவிற்கு வாழ்நாளில் ஏற்பட்ட ஈடர்பாடுகள் குறித்த நாடகம் நேற்று முன்தினம் இரவில் நடந்தது. அதன் பின் இயேசு உடலை மலர்கள் தென்னங்கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்ட துாம்பாவில் வைத்தனர். இதை தொடர்ந்து நேற்று அதிகாலை சர்ச்சில் இருந்து துாம்பா ஊர்வலம் துவங்கியது .
ஊர்வலம் சர்ச்சை சுற்றிய முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சர்ச் வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். இதையடுத்து இன்று இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி , அதை தொடர்ந்து ஏழு சப்பரங்களில் ஊர்வலமும் நடக்கிறது.