ADDED : மே 06, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
செந்துறை: -செந்துறை சூசையப்பர் சர்ச் திருவிழாவில் மழைவேண்டியும், விவசாயம் செழிக்க பொங்கல் கூடையை சுமந்து ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
செந்துறையி சூசையப்பர் சர்ச் திருவிழா சிறப்பு திருப்பலி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
நேற்று திருவிருந்து திருப்பலி, செபஸ்தியார் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் சுற்று கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பொங்கல் கூடைகளை ஊர்வலமாக சுமந்து வந்து சர்ச்சில் பொங்கல் வைத்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து ஆடம்பர திருப்பலி,அன்பின் விருந்து,புனிதர்களின் தேர்பவனி, குருத்துவ அருட்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
