ADDED : பிப் 07, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் தமிழ்நாடு, திரிபுரா மாநிலங்களுக்கு இடையிலான சி.கே.நாயுடு கோப்பைக்கான 23 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி மைதானத்தில் பிப்.9ல் துவங்குகிறது.
நான்கு நாட்கள் நடைபெறும் போட்டி குறித்து திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் வெங்கட்டராமன் தெரிவித்ததாவது: நேற்று துவங்கிய போட்டி பிப். 9 வரை நான்கு நாட்கள் நடக்க உள்ளது. திண்டுக்கல் அணியின் கேப்டன் பூபதி, வீரர் சச்சின் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்று உள்ளனர் என்றார்.
