/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விஜயதசமியையொட்டி பள்ளி, கோயில்களில் வித்யாரம்பம்
/
விஜயதசமியையொட்டி பள்ளி, கோயில்களில் வித்யாரம்பம்
ADDED : அக் 03, 2025 01:11 AM

திண்டுக்கல்; நவராத்திரி விழாவின் 10ம் நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்வி அறிவை புகட்டிடும் வகையில் கோயில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி, திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயில், அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாசப் பெருமாள் கோயில்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மஞ்சள் கலந்த பச்சரிசி, நெல்மணி உள்ளிட்ட தானியங்களை தட்டில் பரப்பி அதில் 'அ' எழுத வைத்து அவர்களின் கல்வி அறிவை துவக்கினர். இதுபோல, குழந்தைகளுக்கு ஹிந்து முறைப்படி அரிசி நிரப்பிய தட்டில் 'ஓம்' எழுதி வித்யாரம்பம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் செயலாளர்கள் மங்களராம், காயத்ரி தலைமையில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு அட்மிசன் நடைபெற்றது. முதன்மை முதல்வர் சந்திர சேகரன் சிறப்பு பரிசுகளை வழங்கினார். உதவி பொது மேலாளர் நாகார்ஜீனா ரெட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோக்சனா, பிரபா, அருண் ஷோரி, விஜய சாந்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கராஜன், ஆசிரிய ஆசிரியைகள், முதன்மை மேலாளர் பிரபாகரன், மேலாளர்கள் ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீகாமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் செயலாளர் நரசிங்க சக்தி, நிர்வாகி ஜோதிலட்சுமி, பேராசிரியர் நடராஜன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் அகிலன், ஆசிரியர்கள் செய்திருந்தனர். திண்டுக்கல் மேதா வித்யாலயாவில் தாளாளர் வனிதா தலைமை வகித்தார். இதில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கை நடைபெற்றது. குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி : சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்விற்கு தாளாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் திலகம் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியை வெண்ணிலா வரவேற்றார். முதல்வர் திலகம் மஞ்சள் கலந்த பச்சரிசியில் அகர எழுத்து எழுத கற்றுக் கொடுத்தார். மேலாளர் பாரதிராஜா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கன்னிவாடி: தருமத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப்பள்ளியில், பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் முருகையா, தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். --
சாணார்பட்டி: -திண்டுக்கல்- சிலுவத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ சேஷாத்திரி மகரிஷி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி (எஸ்.எஸ்.எம்.வி) பள்ளியில் குழந்தைகளுக்கு புதிய ஸ்லைடுகள், எழுதுகோல் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெப ரோஸ் சுபா, ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.