UPDATED : செப் 24, 2026 06:43 PM
ADDED : செப் 24, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:நாடு முழுவதும் அக்.,2 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு செப்.,17 முதல் அக்.,2 வரை 'துாய்மையே சேவை' சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக காந்திகிராம பல்கலை, ரயில்வே நிர்வாகம் இணைந்து திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று துாய்மைப்பணி மேற்கொண்டனர். பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பங்கேற்றார்.
முன்னதாக பல்கலை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முக்கிய ரோடுகள் வழியாக சென்றனர். ரயில் பயணிகளிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
