அடைபடும் ரயில்வே கேட்கள்... அல்லாடும் வாகன ஓட்டிகள்
அடைபடும் ரயில்வே கேட்கள்... அல்லாடும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 05, 2026 05:38 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கியமான ரோடுகளில் ரயில்வே பாதைகள் குறுக்கிடுவதால் ரயில்கள் வரும்போது ரயில்வே கேட் மூடப்படுகின்றன.
அப்போது கேட்டின் இரு புறமும் வாகனங்கள் காத்துகிடக்கின்றன. அவசரத்திற்கு செல்வோர் பரிதவிக்கின்றனர். ரயில் வரும் நேரம் கருதி சற்று தாமதித்து சென்றால் ரயில் தாமதமாக வர வாகனஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இது போன்ற ரயில் கிராசிங் பாதைகளை கண்டறிந்து மேம்பாலம் அமைக்க தமிழக நெடுஞ்சாலை துறை முன்வர வேண்டும்.
