UPDATED : ஆக 22, 2026 05:52 PM
ADDED : ஆக 22, 2026 05:50 PM
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் விற்பனை நடக்கிறது.
விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தேங்காய் அன்றைய சந்தை மதிப்பில் சங்கத்தின் மூலம் விற்பனை செய்து தரப்படும். ஏலம் நடக்கும் நாளுக்கு முதல் நாள் சங்க கிட்டங்கிக்கு கொப்பரை தேங்காய்களை எடுத்துவர வேண்டும்.
இதற்கு கூட்டுறவு விற்பனை சங்கத்தின் 'ஏ' வகுப்பு உறுப்பினராக சேர்வதுடன் கட்டணமாக ரூ.1100 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். சங்க சேவை கட்டணம் கிலோ ஒன்றுக்கு 50 பைசா மட்டுமே.
ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் கொப்பரை தேங்காய்க்கு உரிய தொகையை அடுத்த நாள் ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் உடனடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகலுடன் ஏல விற்பனையில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 70944 13916, 94863 75273, 74184 96106 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
