UPDATED : ஜூன் 22, 2026 08:42 PM
ADDED : ஜூன் 22, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:தென்னை நோய்களை கட்டுப்படுத்தி, விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் மதுசூதனன், மாநில துணைத்தலைவர் கருணாகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ராமசாமி, பொருளாளர் தயாளன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏராளமான தென்னை விவசாயிகள் பங்கேற்றனர். பின் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர்.
