தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ யானைகளால் சேதமடைந்த தென்னை மரங்கள்

யானைகளால் சேதமடைந்த தென்னை மரங்கள்

யானைகளால் சேதமடைந்த தென்னை மரங்கள்


ADDED : செப் 27, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்திரப்பட்டி: பழநி கோம்பைபட்டி பகுதியில் விளை நிலத்தில் புகுந்த யானை கூட்டத்தால் தென்னை மரங்கள் சேதமடைந்தன.

பழநி கோம்பைபட்டி பகுதியில் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்களில் யானை உலாவருகிறது . அவற்றில் மா, கொய்யா, தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி ஆகின்றன. இரவு நேரங்களில் யானை வனப்பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில் அடிக்கடி உலா வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோம்பைப்பட்டிப் பகுதியில் விவசாயி சுப்பிரமணியத்தின் 50, தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதில் 50 தென்னை மரங்கள் சேதமடைந்தன. வனத்துறையினர் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட தென்னந்தோப்பு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us