sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கறிக்கோழிகள் வளர்ப்பு கணக்கெடுப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

/

 கறிக்கோழிகள் வளர்ப்பு கணக்கெடுப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

 கறிக்கோழிகள் வளர்ப்பு கணக்கெடுப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

 கறிக்கோழிகள் வளர்ப்பு கணக்கெடுப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி


ADDED : பிப் 03, 2026 06:10 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கறிக்கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் குறித்து துல்லியகணக்கெடுப்பு நடத்தி நலவாரியம் அமைக்க விரைவில் டி.ஆர்.ஓ., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் '' என, மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் சரவணன் கூறினார்.

இக்கூட்டத்தில் இலவசவீட்டு மனை பட்டா ,கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள்,பண்ணையாளர்கள், நிறுவனங்கள் என 636 மனுக்கள் பெறப்பட்டதில் 40 சதவீத மனுக்கள் கறிக்கோழி பிரச்னைக்கு தீர்வு காண வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்க மாநிலச் செயலாளர்முகமதுரபீக், நிர்வாகிகள் வழங்கிய மனுவில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், பண்ணையாளர்கள்குறித்து துல்லிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை விவசாயிகளுடன் இணைந்து வழங்கினர்.

ஒட்டன்சத்திரம் செங்காட்டுத்தோட்டம் விவசாயி சதீஸ்குமார் வழங்கிய மனுவில், கறிக்கோழி வளர்ப்புகூலியாக கிலோவிற்கு கொள்முதல் விலை ரூ.6.50 வழங்குவதற்கு பதிலாக கிலோவிற்கு 20 ரூபாய்கார்ப்ரேட் நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைநிறைவேற்ற மனு அளித்தார்.

இதை பரிசீலித்த கலெக்டர்,கறிகோழி வளர்ப்பு விவசாயிகள், பண்ணையாளர்கள் குறித்த துல்லியகணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் டி.ஆர்.ஓ., தலைமையில் விரைவில் நடத்தப்படும் என, உறுதியளித்தார்.

39 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, ஆவின் சார்பில் பயனாளிக்கு ரூ.50 காசோலை, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குசான்றிதழ், பரிசு வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்ஸ்ரீராகவ் பாலாஜி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல்அலுவலர் அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுகுமார், சமூக பாதுகாப்புத்திட்டமாவட்ட அலுவலர் ஹென்றி பீட்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவகுமார், கலால்துறை உதவி ஆணையர் பிரபு பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us