தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


UPDATED : செப் 03, 2026 08:42 PM

ADDED : செப் 03, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 08:42 PM ADDED : செப் 03, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் துர்கா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு, மருத்துவ பரிசோதனைகள், கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

வேலுார் அன்னப்பட்டி ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி, சிந்தலவாடம்பட்டி ஊராட்சியில் தார் சாலை பணிகள், அரசு துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி, சத்திரப்பட்டி சீனிவாசன் நினைவு பெண்கள் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கான உணவு பொருள்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

தாசில்தார் சண்முகம், நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா, முருகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us