ADDED : ஆக 28, 2026 08:01 PM
பழநி, ஆக.28-
பழநி நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு பணிகளை கலெக்டர் துர்கா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த அவர், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் குப்பைக்கழிவுகளை 4 வகையாக தரம் பிரித்து பெற வேண்டும் என துாய்மை பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து பழநி பெரியநாயகி அம்மன் கோயில் அருகே குப்பை தரம் பிரித்து சேகரித்து வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். கோடைகால நீர்த்தேக்கம் பகுதியில் நடுவதற்கு மரக்கன்றுகள் உற்பத்திக்கு துவங்கியுள்ள நர்சரியில் ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே பாதாள சாக்கடை திட்ட பணிகள், பெரியப்பா நகரில் நாய்கள் கருத்தடை மையம், தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், இளநிலை பொறியாளர் ஆண்டனி செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
