UPDATED : நவ 10, 2026 10:48 PM
ADDED : நவ 10, 2026 10:44 PM
திண்டுக்கல்: திண்டுக்கல், ஆத்துார், நிலக்கோட்டை ஒன்றியங்களில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு சமுதாய நல மையம், சமூகநீதி கல்லுாரி மாணவியர் விடுதி, ரேஷன் கடைகள், கஸ்துார்பா மருத்துவமனை, குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் கலெக்டர் துர்கா ஆய்வு செய்தார்.
பாலகிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் இருப்பு, டாக்டர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவேடு ஆகியன குறித்து ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து சின்னாளப்பட்டி பேரூராட்சி காந்தி கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் தரம், கையிருப்பு பதிவேடு விபரங்கள், பி.ஓ.எஸ்., விற்பனை முனைய இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, தாசில்தார்கள் நிலக்கோட்டை ராமசாமி, ஆத்துார் சுரேஷ்குமார், அம்மைநாயக்கனுார் பேரூராட்சி செயல்அலுவலர் பாண்டீஸ்வரி உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
