UPDATED : செப் 26, 2026 03:35 PM
ADDED : செப் 26, 2026 02:10 PM
நத்தம்:-நத்தம் என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில் இந்துஸ்லேண்ட், பூர்விகா, முத்துாட் பைனான்ஸ், ஓமேகா ஹெல்த் கேர், ஆக்சிஸ் மேக்ஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று கலந்துரையாடல், நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்தனர்.
இத்தேர்வில் ஆங்கிலம், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பவியல், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். 233 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர்.
கல்லுாரி முதல்வர் பொ.சரவணன் முன்னிலை வகித்தார். என்.பி.ஆர்., கல்விக்குழும வேலைவாய்ப்பு அதிகாரி பெ.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி நிர்வாகத்தினர், மேஜிக் பஸ் பவுண்டேஷன் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
