/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
/
கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
ADDED : நவ 26, 2024 05:47 AM
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கல்லுாரி மாணவியை கடத்தி மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த மாணவரை போலீசார் தேடுகின்றனர்.
கோவில்பட்டியை சேர்ந்தவர் 17 வயது கல்லுாரி மாணவி சில தினங்களுக்கு முன்பு மாயமானார். உறவினரான சந்தான் 25, மீது சந்தேகம் உள்ளதாக போலீசில் பெற்றோர் தெரிவிக்க திருச்சியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. அவரை பிடிக்க முயன்ற போது மாணவியை விட்டுவிட்டு தப்பினார். விசாரணையில் கல்லுாரி சென்று திரும்பிய போது மிரட்டி டூவீலரில் கடத்தி சென்று முகவரி தெரியாத இடத்தில் அடைத்து கழுத்தில் தாலி கட்டியதாக கூறினார். மேலும் மயக்க மருந்து கொடுத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். மாணவியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் தப்பிய இளைஞரை தேடுகின்றனர்.