sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரிப்பு

/

குப்பையை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரிப்பு

குப்பையை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரிப்பு

குப்பையை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரிப்பு


ADDED : பிப் 21, 2025 06:32 AM

Google News

ADDED : பிப் 21, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்பெட்டியால் விபத்து : கொடைக்கானல் கலையரங்கம் சந்திப்பு பகுதியில் சேதமடைந்த மின்பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது. சுற்றுலா நகரில் இது போன்ற நிலை பரவலாக உள்ளது. இதன் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--கார்த்தி, கொடைக்கானல்.

அகற்றாத சாக்கடை மண் : அம்மையநாயக்கனுார் பேரூராட்சி ஏ.புதுார் கிராமத்தில் மெயின் ரோட்டில் சாக்கடை பாலம் கட்டி நாட்களாகியும் மண் அகற்றப்படமால் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

-க.ரதிஷ் பாண்டியன், பொம்மணம்பட்டி.

கழிவுகளை கொட்டி தீ : திண்டுக்கல் திருச்சி ரோடு ஆர். எம். டி. சி. அருகே பிளாஸ்டிக் கலந்த கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் கரும் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் . குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-ராமர், திண்டுக்கல்.

போக்குவரத்திற்கு இடையூறு : பழநி ராஜாஜி ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இஏதாடு ஆங்காங்கே விபத்து அபாயமும் உள்ளது .இதன் காரணமாக வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர்.

-வேல்முருகன், பழநி.

மின் கம்பத்தில் செடிகள் : வடமதுரை கொல்லப்பட்டி புதுார் ரோட்டில் மின் கம்பத்தில் செடி படர்ந்துள்ளதால் தேவாங்கு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது. கொடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---ரவி, அய்யலுார்.

குப்பையை அகற்றாது தீ : நத்தம் அருகே பூதகுடியில் ஊராட்சி அலுவலகம் அருகே குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனுடன் குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளும் எரிவதால் நோய் அபாயம் உள்ளது. -ராஜேஷ், பூதகுடி.

ரோட்டில் ஓடும் கழிவு நீர் : திண்டுக்கல் அருகே மாலைப்பட்டி ரோட்டில் சாக்கடை முறையாக இல்லாத நிலையில் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது .கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. -ராஜா, மாலப்பட்டி.--------






      Dinamalar
      Follow us