ADDED : ஜூலை 24, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : சாணார்பட்டி ஒன்றியம் ஒத்தக்கடையில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசாத், மாவட்ட குழு உறுப்பினர்கள் பெருமாள்,பாப்பாத்தி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் நாகலட்சுமி முன்னிலை வகித்தனர்.
ஒத்தக்கடை பகுதியில் அலைபேசி டவர் அமைக்க கோரியும், புறநகர் பஸ்களை ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பபட்டது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா, முருகன், கிளை செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டனர்.