UPDATED : ஆக 22, 2026 06:27 PM
ADDED : ஆக 22, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:கம்யூ., மாணவர் அமைப்பை குறிவைத்து சுற்றறிக்கை அனுப்பிய தலைமை செயலாளர், கம்யூ.,களை கணக்கெடுப்பு செய்ய உத்தரவிட்ட தாசில்தாரை கண்டித்து திண்டுக்கல் மா.கம்யூ., கட்சி சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று பேசினர். மாநில குழு உறுப்பினர் ராணி, நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதேபோல் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வம் தலைமை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம் , செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கமலக்கண்ணன், கந்தசாமி, ஒன்றிய செயலாளர் கனகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
