ADDED : மே 08, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கம்யூ.,க்கள் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு, ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிடங்கள் ரத்து செய்ததை கண்டித்து தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாக்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநில குழு உறுப்பினர் ராணி தலைமை வகித்தனர். இ.கம்யூ. செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கிருஷ்ணசாமி, முருகேசன் பேசினர்.
விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் மைதீன் பாவா, கம்யூ., ரவி பங்கேற்றனர்.கூட்டணியில் உள்ள தி.மு.க., வை தவிர்த்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
