ADDED : பிப் 12, 2026 06:10 AM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அரசு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்டத் திட்ட அலுவலர் பூங்கொடி, தி.மு.க., மாவட்டப் பொருளாளர் விஜயன், தி.மு.க., ஒன்றியச் செயலாளர்கள் ரத்தினக்குமார், சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கமலம் வரவேற்றார். தொடர்ந்து நத்தம் ஒன்றியப் பகுதிகளை சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு 21 சீர்வரிசை வளைகாப்பு பொருட்கள் வழங்கபட்டன. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி உள்ளிட்ட தி.மு.க., கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
