ADDED : பிப் 24, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியத்தில், பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். குஜிலியம்பாறை மணப்பாறை ரோடு முதல், ஆர்.சி., தெரு வழியாக ராமகிரி வரை புதிய தார் சாலை அமைப்ப தற்கான பூமி பூஜை, பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கான
புதிய கட்டடம் திறப்பு விழா, பாளையம் வரச்சந்தை கட்டம் திறப்பு விழா நடைபெற்றன.
குஜிலியம்பாறை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சசி, முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., கிருஷ்ணன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சவுந்தர் பங்கேற்றனர்.
