தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பில் நடைபாதை அவதிப்படும் பயணிகள்

 ஆக்கிரமிப்பில் நடைபாதை அவதிப்படும் பயணிகள்

 ஆக்கிரமிப்பில் நடைபாதை அவதிப்படும் பயணிகள்


ADDED : பிப் 22, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டிற்குள் நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளதால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்நகராட்சி பஸ்டாண்ட்டிற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பஸ் ஸ்டாண்டின் கிழக்குப் பகுதியில் டவுன் பஸ்களும், மேற்குப் பகுதியில் வெளியூர் செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன.

கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் நடைபாதையை சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளனர்.

மேலும் பஸ் ஸ்டாண்டில் ஒதுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சில அடிகள் அதிகரித்து கடைகளை விரிவாக்கம் செய்து விடுகின்றனர்.

இதனால் வேகமாகச் சென்று பஸ்சில் ஏறும் நிலையில் உள்ள பயணிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் சிரமம் இன்றி நடந்து செல்வதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us