/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் பெயர்களில் போலிகள்; விடுமுறை பயிற்சி வகுப்புகளில் சேர்வதில் தேவை கவனம்
/
போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் பெயர்களில் போலிகள்; விடுமுறை பயிற்சி வகுப்புகளில் சேர்வதில் தேவை கவனம்
போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் பெயர்களில் போலிகள்; விடுமுறை பயிற்சி வகுப்புகளில் சேர்வதில் தேவை கவனம்
போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் பெயர்களில் போலிகள்; விடுமுறை பயிற்சி வகுப்புகளில் சேர்வதில் தேவை கவனம்
ADDED : மார் 29, 2024 06:30 AM

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்த நிலையில் 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 1 முதல் 9 வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10 , பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்த கட்ட கல்வியை தொடரும் வழிகள் குறித்த திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற வகுப்பு மாணவர்கள் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் கல்லுாரி மாணவர்களும், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்த ஏதுவாக கோடைகால விடுமுறையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இச்சூழலில் நீட், ஜே.இ.இ., டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., போலீஸ் பணிக்கான தேர்வு, டைப்ரைட்டிங், அடிப்படை கம்ப்யூட்டர் கல்வி, நீச்சல், யோகா, நர்சிங் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பெயர்களைக் கொண்டு குக் கிராமங்கள் தோறும் பயிற்சி மையங்கள் பல உருவாகி வருகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை பயிற்சிக்கான போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழலில் செயல்பட்டு வருகின்றன.
உரிய பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை .தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அதற்கான கட்டட வசதிகளின்றி நெரிசலான சூழலில் பயிற்சி மையங்களை நடத்துகின்றனர்.
உரிய அரசு துறைகளில் அங்கீகாரம் பெறப்படாத சூழலில் கட்டணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சேர்க்கை நடத்துகின்றனர். பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாதவையாக உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பயிற்சி நிறுவனங்கள், சேர்க்கை நடத்துகின்றன. இதற்காக கவர்ச்சியான விளம்பர உத்திகளை கையாண்டு வருகின்றனர். போலி நிறுவனங்கள் மூலம் கடந்த காலங்களில் அதிக கட்டணம் செலவிட்ட நிலையில் பலர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
இது போன்ற சூழலில் ஏமாற்றப்படுவதை தவிர்க்க போலி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். ஆயத்தமாகி வரும் மாணவர்கள், பயிற்சி அமைப்பை தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பான முழுமையான தகவல்களை விசாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

