/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முட்டை வாகன டிரைவர் மீது தாக்குதல் ஒன்றிய அலுவலர்கள் மீது புகார்
/
முட்டை வாகன டிரைவர் மீது தாக்குதல் ஒன்றிய அலுவலர்கள் மீது புகார்
முட்டை வாகன டிரைவர் மீது தாக்குதல் ஒன்றிய அலுவலர்கள் மீது புகார்
முட்டை வாகன டிரைவர் மீது தாக்குதல் ஒன்றிய அலுவலர்கள் மீது புகார்
ADDED : ஜூலை 11, 2025 03:23 AM
கொடைக்கானல்: - கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு முட்டை வாகன டிரைவரை தாக்கியதாக போலீசில்ஒன்றிய அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் புதுக்காட்டை சேர்ந்தவர் அன்பழகன் 24. சத்துணவு முட்டைகளை அரசு பள்ளிகளில் வாகனம் மூலம் சப்ளை செய்யும் டிரைவராக சில மாதமாக உள்ளார்.நேற்று முன்தினம் வாகனம் மூலம் முட்டையை சப்ளை செய்வதற்காக வாகனத்தை எடுக்க டூவீலரை ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி உள்ளார்.
இரவு முட்டை வாகனத்தை நிறுத்த வந்த நிலையில் அங்கிருந்த பி.டி.ஓ., மாணிக்கம், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், டிரைவர் சிவசக்தி ஆகியோர் வாகனத்தை நிறுத்தக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளனர்.
தொடர்ந்து அன்பழகனை தாக்கியும், தகாத வார்த்தையில் பேசி கன்னத்தில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். அதிகாரிகள் மீது அன்பழகன் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இருதரப்பிலும் விசாரிக்கின்றனர்.