sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மலைப்பகுதி பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த டீசல், பெட்ரோல் வாகனங்கள் பழுதாவதாக புகார்

/

 மலைப்பகுதி பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த டீசல், பெட்ரோல் வாகனங்கள் பழுதாவதாக புகார்

 மலைப்பகுதி பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த டீசல், பெட்ரோல் வாகனங்கள் பழுதாவதாக புகார்

 மலைப்பகுதி பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த டீசல், பெட்ரோல் வாகனங்கள் பழுதாவதாக புகார்


ADDED : ஜன 16, 2026 06:02 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணைக்காடு: கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள ஊத்து பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் ,டீசல் விற்பனையால் வாகனங்கள் பழுதாவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

பண்ணைக்காடு பேரூராட்சி ஊத்து பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்படுகிறது. எரிபொருள் நிரப்ப சிறிது நேரத்தில் வாகனங்கள் பழுதான நிலையில் இவற்றை சோதித்த போது தண்ணீர் கலந்து இருப்பதாக மெக்கானிக் கூறினர். இதையடுத்து வாகனங்களை பழுது செய்து வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வாகனம் பழுதாகி நிற்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். பட்லங்காடு டிரைவர் மேப்பராஜா கூறுகையில்,'' இரு தினங்களுக்கு முன் ஊத்து பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் வாகனத்திற்கு இடப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் வாகனம் பழுதானது. வாகனத்தை சோதனை செய்தபோது டீசலில் தண்ணீர் கலந்திருப்பது தெரிய வந்தது. இங்கு கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டப்பட்டுள்ளதால் அவதியுறும் நிலை உள்ளது '' என்றார்.ெட்ரோல் பங்க் மேலாளர் கூறுகையில்,''பங்கில் விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசலில், தண்ணீர் கலக்கவில்லை.முறையாக தான் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்கிறோம் '' என்றார்.






      Dinamalar
      Follow us