/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருஆவினன்குடியில் அபிஷேக பால் வழங்குவதில் குழப்பம்
/
திருஆவினன்குடியில் அபிஷேக பால் வழங்குவதில் குழப்பம்
திருஆவினன்குடியில் அபிஷேக பால் வழங்குவதில் குழப்பம்
திருஆவினன்குடியில் அபிஷேக பால் வழங்குவதில் குழப்பம்
ADDED : நவ 28, 2025 08:02 AM
பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் அபிஷேக பால் வழங்குவதில் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் திருஆவினன்குடியில் சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தரச் சான்று பெற்ற பால் மட்டுமே அபிஷேகத்திற்கு வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 'பாக்கெட் பால்' அபிஷேகத்திற்கு பெறப்படுவதில்லை.
உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழ் பெற்றிருந்த போதிலும் அபிஷேகத்திற்காக பக்தர்களிடம் பாக்கெட் பாலை கோயில் பணியாளர்கள் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக பசும்பால் வழங்கினால் பெற்றுக் கொள்கிறோம் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் கோயில் அருகில் உள்ள கடைகளில் பாக்கெட் பாலை வாங்கி அங்கு ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை பக்தர்கள் அபிஷேகத்திற்கு கோயில் பணியாளர்களிடம் தருகின்றனர். ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் உணவு பாதுகாப்பு தரச்சாற்று பெற்ற நெய், எண்ணை மட்டுமே சுவாமிக்கு வழங்க வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் குழப்பம் அடைகின்றனர்.

