
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : துாத்துக்குடி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்த பிரதமர் மோடியை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் மணிக்கூண்டு அருகில் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை, துணைத் தலைவர்கள் ஜோதி ராமலிங்கம்,காஜா மைதீன், நிக்கோலோஸ்,பொதுச் செயலாளர்கள் ராஜா,அபுதாகிர், அப்துல் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார்,கவுன்சிலர் பாரதி பங்கேற்றனர்.

