ADDED : மார் 08, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ.,வங்கி கால தாமதப்படுத்தாமல் விரைந்து வழங்க வேண்டும்.
குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தை அம்பானி வீட்டு நிகழ்ச்சிக்காக 10 நாட்கள் சர்வதேச விமான நிலையமாக மாற்றியிருப்பதை கண்டித்து, திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் திண்டுக்கல் சாலை ரோடு எஸ்.பி.,ஐ.,வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை,அம்சவள்ளி, துணைத் தலைவர்கள் நிக்கோலஸ்,ஜோதிராமலிங்கம்,காஜா மைதீன்,பொதுச்செயலாளர்கள் அபுதாகிர், செந்தில் அதிபன்,பால்ராஜ், மகளிர் காங்., தலைவர் ரோஜாபேகம்,இளைஞர் காங்., தலைவர் முகமது அலியார்,எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் காளிராஜ் பங்கேற்றனர்.

