ADDED : பிப் 05, 2026 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: லோக்சபாவில் காங்., எம்.பி.,க்கள் குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் உட்பட 9 எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர் மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் நிக்கோலஸ், முகமதுஅலியாஸ், விவசாய அணி மாநில செயலாளர் பழனிக்குமார், ரெட்டியார்சத்திரம் வட்டார துணைத் தலைவர் முத்தையா, மாநகராட்சி கவுன்சிலர் பாரதி, மகிளா காங்., தலைவர் மேரிசாரா, கிழக்கு ஒன்றியத் தலைவர் மதுரை வீரன் பங்கேற்றனர்.

