ADDED : பிப் 25, 2026 07:37 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே முளையூர் ஊராட்சி ராவுத்தம்பட்டி,சிறுகுடி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நுாறுநாள் வேலை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
வட்டார காங்கிரஸ் தலைவர் பழனியப்பன், நகர தலைவர் அப்துல்காதர், மாவட்ட நிர்வாகிகள் துரைச்சாமி, ராமலிங்கம் கலந்து கொண்டனர். ராவுத்தம்பட்டி, சிறுகுடி பகுதிகளில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியது குறித்தும், வேலை இழப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
