ADDED : நவ 28, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: உத்திரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து அடக்கு முறையை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையின காங்கிரசார் ,மாவட்ட மாநகர காங்கிரசார் சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் முகமது ஹாரூன் ரஷீத் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசத் அலி முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், சிறுபான்மையினர் பிரிவு துணை தலைவர் முகமது இம்ரான் பங்கேற்றனர்.