UPDATED : மே 09, 2026 12:00 AM
ADDED : மே 08, 2026 11:50 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க.,வை ஆட்சி அமைக்க விடாமல் மத்திய அரசு தடுப்பதாகவும், தமிழக கவர்னரை கண்டித்தும் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேற்கு தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் காஜாமைதீன், அலியார், நிலக்கோட்டை வட்டார தலைவர் கோகுல்நாத் பங்கேற்றனர்.
