ADDED : பிப் 09, 2026 04:54 AM
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை வட்டார காங்., சார்பில், தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வடக்கு வட்டாரத் தலைவர் தர்மர் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சோமுராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் வேடசந்துார் சட்டசபை தொகுதியை கூட்டணியில் உள்ள காங்., கேட்டு பெற வேண்டும். குளங்களில் வண்டல் மண் திருடுவது தடுக்கப்பட வேண்டும். நுாறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் பெயரை நீக்கி, மத்திய அரசு அறிவித்த புதிய பெயரை 'வாபஸ்' பெற வேண்டும். சட்டசபை தேர்தலில் வென்று, தி.மு.க. ஆட்சியில் பங்குதர வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் வட்டார தலைவர் பெருமாள், இளைஞர் காங்., தொகுதி துணைத் தலைவர் மோகன்ராம், கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், பழனிச்சாமி, தங்கவேல், பழனியப்பன் பங்கேற்றனர்.
