ADDED : அக் 31, 2024 02:57 AM

திண்டுக்கல்: அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் நடந்த கட்டுமான பொருட்கள் கண்காட்சி நிறைவு விழாவில் அனைத்து நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. வரதராஜ் காம்ப்ளக்சில் இயங்கும் ஸ்ரீ வாசவி ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தின் சார்பில் குலுக்கல் மூலம் தேர்வான பழநி ரோட்டில் உள்ள கனக பாண்டி ரஞ்சிதாவுக்கு 4 கிராம் தங்கம் காசினை அனுஷ் டைல்ஸ் இயக்குனர் காளிமுத்து வழங்கினர்.
கண்காட்சி குழு தலைவர் ஜனகர், துணைத் தலைவர்கள் முகமது அப்துல் காதர், மணிவண்ணன், தலைமை தலைமை வகித்தனர். திண்டுக்கல் மைய தலைவர் பவுல்ராஜ் ,செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் மோகன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் தலைவர்கள் குழந்தை ராஜ்,மீனாட்சி சுந்தரம், வீரமார்பன் ,உதயகுமார், தர்மலிங்கம் பிரேம்குமார், பூபேஷ்குரு, சிவப்பிரகாஷ், ரமேஷ், ஸ்டீபன் செய்திருந்தனர். தலைவர் பவுல்ராஜ் நன்றி கூறினார்
