ADDED : பிப் 13, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
தொப்பம்பட்டி: பழநி புளியம்பட்டி அருகே தனியார் கல்குவாரி அமைக்க பழநி ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் பொது மக்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கருத்து கேட்புக் கூட்டத்தில் அதிக பேர் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் உஷாராணி, கண்காணிப்பாளர் ஜான்சி ராணி, தாசில்தார் பிரசன்னா பொது மக்கள் பங்கேற்றனர்.
