ADDED : ஏப் 26, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோடு காந்திஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் குடியிருப்பு பகுதியில் எரியாத மின்விளக்குகளை சீரமைக்க வலியுறுத்துவது, சாக்கடை கட்டமைப்பு, பழுதடைந்த குடிநீருக்கான போர்வெல் மின்மோட்டாரை சீரமைக்க சீலப்பாடி ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
