ADDED : ஆக 18, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.19
திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் டாம்கோ, டாப்செட்கோ தனிநபர், குழுக்கடன்கள் வழங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் ஸ்ரீராகவ்பாலாஜி தலைமை வகித்தார்.
டாம்கோ தனிநபர் கடன் 36 உறுப்பினர்களுக்கு ரூ.19.50 லட்சம், குழுக்கடன் 7 குழுக்களுக்கு (91 உறுப்பினர்கள்) ரூ.88 லட்சம், டாப்செட்கோ தனிநபர் கடன் 5 உறுப்பினர்களுக்கு ரூ.3 லட்சம், குழுக்கடன் 2 குழுக்களுக்கு (23 உறுப்பினர்கள்) ரூ.17 லட்சம் கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகளை இணைப்பதிவாளர் அலுவலக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
