ADDED : செப் 04, 2026 10:34 PM
வேடசந்துார், செப்.5
வேடசந்துார் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் செப்.,14-ல் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து செப்.,17ல் ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து மகாசபா, ஹிந்து தமிழர் கட்சி சார்பிலும், செப்.,18ல் ஹிந்து முன்னணி சார்பிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்க உள்ளது.
இதையொட்டி வேடசந்துார் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவர் பேசுகையில், ‘சிலை பிரதிஷ்டை செய்த இடங்களில் பகலில் 2 பேரும், இரவில் 2 பேரும் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக்க கூடாது. சிலை வைத்திருக்கும் இடத்தில் தகரசெட் அமைக்க வேண்டும். ஊர்வலத்தின் போது பக்தி பாடல்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்’ என்றார்.
