ADDED : பிப் 21, 2026 07:08 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழ்நாடு சுமை துாக்குவோரின் மாநில பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் மண்டல அலுவலக கோடவுன் வருகை பதிவேட்டில் சுமைப் பணியாளர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும்.
சங்கத்தின் அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். பத்து ஆண்டுகள் பணி புரிந்த சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு பச்சை நிற கார்டு வழங்கி ஊதிய வரன்முறை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக அலுவலகத்தை சுமைதுாக்குவோர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்டத் தலைவர் கந்தவேல் தலைமையில் முற்றுகையிட்டனர்.
