/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுரங்கப்பாதை சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீரால் தொற்று
/
சுரங்கப்பாதை சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீரால் தொற்று
சுரங்கப்பாதை சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீரால் தொற்று
சுரங்கப்பாதை சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீரால் தொற்று
ADDED : ஜன 03, 2025 06:44 AM

மேடு, பள்ளமான ரோடால் சிரமம் : சின்னப்பள்ளப்பட்டி ஏ.டி. காலனி தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு மேடும் பள்ளமாக இருப்பதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது .இதன் காரணமாக ரோடு மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது.
--சுரேஷ், சின்னபள்ளப்பட்டி.
மூடி இல்லாத சாக்கடை : புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி முதல் பொம்மநல்லுார் வரை நடக்கும் சாக்கடை பணியில் மேல் பகுதியில் மூடி அமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் பணி நடக்கும் போதே மூடி அமைக்க வேண்டும்.
-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
ரோட்டில் சாக்கடை கழிவு : திண்டுக்கல் நேருஜி ரவுண்டானா அருகே ரயில்வே சுரங்கப்பாதை சர்வீஸ் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது .கொசுக்களும் உற்பத்தியால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
-ஈஸ்வரன், திண்டுக்கல்.
குப்பையால் சுகாதாரக்கேடு : திண்டுக்கல் -பழநி ரோட்டில் குப்பை அள்ளப்படாமல் சிதறி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையில் கால்நடை மேய்கிறது .குப்பையை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமாரி, திண்டுக்கல்.
ரோடு நடுவே மின் கம்பம் : திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு நடுவே உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. இதற்கான ஸ்டே கம்பிகளை ரோட்டில் கட்டி வைத்துள்ளதால் இரவு நேரங்களில் கம்பி தெரியாமல் மோதி விழுகின்றனர்.
-குமரன், திண்டுக்கல்.
சேதமான ரோடு : திண்டுக்கல் முத்தழகுப்பட்டி ஓத சுவாமி கோயில் எதிரே ரோடு சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் அதிக அளவு சென்று வருவதால் ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துக்குமார், திண்டுக்கல்.
லாரிகளை கட்டுப்படுத்துங்க : திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி ஹாஜி ஹனிபா நகரில் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது .இங்குள்ள கோடவுனுக்கு லாரிகள் செல்வதால் ரோடு சேதமாகிறது. லாரிகள் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும்.
-சபரி, திண்டுக்கல்.

