தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தலில் போட்டி: அண்ணாமலை பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் போட்டி: அண்ணாமலை பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் போட்டி: அண்ணாமலை பேட்டி


UPDATED : அக் 18, 2026 11:40 PM

ADDED : அக் 18, 2026 10:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 11:40 PM ADDED : அக் 18, 2026 10:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: 'தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் 'வீ த லீடர்ஸ்' போட்டியிடும்' என அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி சண்முக நதியில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பினர் கடந்த 12 வாரங்களாக சனி, ஞாயிறு நாட்களில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். இப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சண்முக நதியில் நேற்று நடந்தது. 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து நதியில் பூக்களைத் துாவி வணங்கி, அப்பகுதியில் மரக்கன்று நட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், 'மாசுபட்டுக் கிடந்த சண்முக நதியை சுத்தம் செய்துள்ளனர். இப்பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி கோயில் நிதியை ஒதுக்கி நதியை துாய்மையாக பராமரிக்க ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் வைக்கிறேன். ஏரி, குளங்களை மீட்டெடுப்பதும் துாய்மையாக வைப்பதும் உள்ளாட்சியின் பணி. உள்ளாட்சி அமைப்புக்கு வரும் நிதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் 'வீ த லீடர்ஸ்' அமைப்பினர் போட்டியிடுவார்கள் என்றார்.

அதன்பின் நிர்வாகி கனகராஜ் பேசுகையில் குறுக்கிட்ட அண்ணாமலை கட்டாயமாக கட்சி துவங்கப்படும் என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us