ADDED : பிப் 07, 2024 07:05 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு தேர்வுநிலை ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி கடந்த கால வேலைநிறுத்த போராட்ட நாட்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 18 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துகின்றனர். நேற்று சென்னையில் இயக்குனர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திண்டுக்கல் உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சென்னைக்கு சென்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 600-க்கு மேற்பட்ட அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

