/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3வது நாளாக தொடரும் போராட்டம் பஸ் ஸ்டாண்ட்களில் நிற்கும் பஸ்கள்
/
3வது நாளாக தொடரும் போராட்டம் பஸ் ஸ்டாண்ட்களில் நிற்கும் பஸ்கள்
3வது நாளாக தொடரும் போராட்டம் பஸ் ஸ்டாண்ட்களில் நிற்கும் பஸ்கள்
3வது நாளாக தொடரும் போராட்டம் பஸ் ஸ்டாண்ட்களில் நிற்கும் பஸ்கள்
ADDED : ஆக 21, 2025 08:26 AM

வேடசந்துார் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வரும் போராட்டம் காரணமாக முக்கிய நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் ஊழியர்கள் பற்றாக் குறையால் பஸ் ஸ்டாண்ட்களில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 8 கோட்டங்களாக பிரித்து ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கத்தில் உள்ளன. 1.25 லட்சம் பேர் பணியில் உள்ள நிலையில் 60 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். தி.மு.க., அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது போக்குவரத்து தொழிலாளர் களின் பிரச்னைகளை 100 நாளில் தீர்ப்போம் என வாக்குறுதி கொடுத்தனர். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், ஓய்வு பெற்றோர் பணப்பலன்கள் நிலுவையில் உள்ளதாகவும் கூறி சென்னையில் சி.ஐ.டி.யு., சம்மேளன தலைவர் சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தலைவர் , பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அரசு டெபோ முன்பு காத்திருப்பு போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது. இதனால் பல டெப்போக்களில் பஸ்களை இயக்க போதிய ஓட்டுனர், நடத்துநர் இல்லாததால் நேற்று வேடசந்துார் பஸ் ஸ்டாண்டில் 9 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. டெப்போ மேலாளர் ஜெயகாந்தன் கூறுகையில்,'' ஸ்டிரைக் காரணத்தை கூறி அரசு பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதை இயக்க முயற்சி செய்கிறோம்'' என்றார்.