UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டியில் வடமதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. நேற்றைய ஏலத்தில் கிலோ தேங்காய் பருப்பு முதல் தரம் அதிகபட்சமாக ரூ.149 குறைந்தபட்சமாக ரூ.120, இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.120 குறைந்தபட்சமாக ரூ.70 என ஏலம் போனது. மொத்தம் 446 கிலோ கொப்பரை ரூ.66 ஆயிரத்து 338-க்கு ஏலம் போனது.
இந்த மறைமுக ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அங்காளஈஸ்வரி தலைமை வகித்தார். மண்டி ஆய்வாளர்கள் அசோக்குமார், பொன்ராம் உடனிருந்தனர். விற்பனை குறித்த மேலும் விபரங்கள் பெற 99433 47233 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
